Tuesday, January 27, 2026

சிவபுராணம் 2 / Shivapuranam 2

 Shivapuranam சிவபுராணம் 2

இன்னிசை முழங்க... பெருமாக்கோதையாரின் பதவியேற்பு விழா..!


சிவபுராணம் - பகுதி 2

(திருவிளையாடலும், திருவினையும்)


உலக உயிர்களின் கழறியச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையாருக்கு கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று. அதாவது, உயர்திணை மற்றும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை அறிந்து கொள்ளும் நுண்ணறிவினைப் பெற்றவர் என்பதைக் குறிப்பதாகும். பெருமாக்கோதையார் அமைச்சர்களை நோக்கி இறைவனின் அருளும், ஆசியும் கிடைத்தமையால் தாம் அரச பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று உரைத்தார். அங்கு கூடியிருந்த அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பெருமாக்கோதையார் எம்பெருமானின் திருவருளோடு நாட்டின் தலைநகரான கொடுங்கோள+ரை அடைந்து சுபநட்சத்திரம் மற்றும் திதிகள் நிறைந்த ஒரு நன்நாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற பொன் மணிமுடியினைச் சூடிக் கொண்டார். மலை நாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் திருவஞ்சைக்களத் திருக்கோவிலை வலம் வந்து... நிலத்தில் வீழ்ந்து... எம்பெருமானை தரிசித்து வணங்கினார். பட்டத்து யானையின் மீது அமர்ந்து வெற்றிக்குடையும், வெண்சாமரையும்... பரிசனங்கள் தாங்கிவர... மேளதாளங்களும், வேத கோஷங்களும்... இன்னிசைகளும் முழங்க... திருநகரை வலம் வந்தார்.

அப்பொழுது உவர்மண் நிரம்பிய பொதியைத் தோளிலே சுமந்து கொண்டு வரும் ஒருவரை மன்னர் கண்டார். கருமேகத்தினால் விண்ணுலகில் இருந்து மண்ணுலகம் வந்த மழையில் நனைந்து வந்தமையால் அவரது சரீரம் உவர்மண் படிந்து வெளுத்திருந்தது. உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால் உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேட திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் சேரமான் விரைந்து யானையில் இருந்து இறங்கிச் சென்று அவரை வணங்கினார்.


தனது முதுகில் பொதியை சுமந்து கொண்டு வந்த வண்ணான், வேந்தன் தன்னை வணங்கியதை கண்டதும் சித்தம் கலங்கி அச்சமுற்று நடுநடுங்கினான். பின்பு தனது கரங்களில் இருந்த உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு வேந்தரின் பாதங்களைப் பணிந்து தங்கள் அடியானாகிய நான் அடிமைத் தொழில் புரியும் வண்ணான் என்று கூறினார். அதைக் கேட்டதும் வேந்தர் மகிழ்ச்சி பெருவெள்ளத்தோடு யான் அடிச்சேரன் என்றும், தங்களை கண்டதும் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை யாம் நினைக்கும்படி செய்தீர்கள் என்றும், ஆதலால் தங்கள் மனம் வருந்தாது செல்வீராக... என்று அவரிடம் கூறி வழியனுப்பினார்

No comments:

Post a Comment

அன்ன ஸூக்தம்

 அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும்,  பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது.  இது உணவை  தெய்வமாக...