Tuesday, January 27, 2026

பைரவர் புராணம்:

 சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒருவரான அருள்மிகு ஶ்ரீபைரவரின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்🙇‍♂. 

 பைரவர் புராணம்: 
அந்தகாசுரன் எனும் அசுரன் 
சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம்கொண்டு, தேவமுனிகளை வதைத்தான்.  

தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். 

தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். 
தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்களை தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

பைரவ வடிவங்கள்:
மகாபைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்துநான்கு பணிகளை செய்ய அறுபத்துநான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. 

 அஷ்ட பைரவர்கள் :
(1) அசிதாங்க பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில், முதலாமவர். அன்னப் பறவையை வாகனமாக கொண்டவர். குருவின் கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். 

(2) குரு பைரவர்: 
அஷ்ட பைரவமூர்த்திகளில், இரண்டாமவர். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். சுக்கிரனின் கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய 
சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள். 

(3) சண்ட பைரவர்: 
அஷ்ட பைரவமூர்த்திகளில் மூன்றாமவர். மயிலை வாகனமாக கொண்டவர். செவ்வாய் தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி 
வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள். 

(4) குரோதன பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில் நான்காமவர். கருடனை வாகனமாக கொண்டவர். சனி கிரகதோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய 
சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான வைஷ்ணவி 
விளங்குகிறாள். 

(5) உன்மத்த பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில், ஐந்தாமவர். குதிரையை வாகனமாக கொண்டவர். புதனின் கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி  வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான வராஹி விளங்குகிறாள். 

(6) கபால பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில், ஆறாமவர்.  யானையை வாகனமாக கொண்டவர். சந்திர கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான இந்திராணி 
விளங்குகிறாள். 

(7) பீக்ஷன பைரவர்: 
அஷ்ட பைரவமூர்த்திகளில், ஏழாமவர். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். கேது கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி 
வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள். 

(8) சம்ஹார பைரவர் :
அஷ்ட பைரவமூர்த்திகளில் எட்டாமவர்.  நாயை வாகனமாக கொண்டவர். ராகு கிரக தோஷத்திற்காக இவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி 
வடிவமாக சப்தகன்னிகளில் 
ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.​ 

 இருப்பிடம் :
காசி மாநகரில், திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

அன்ன ஸூக்தம்

 அன்ன ஸூக்தம் அன்ன ஸூக்தம் (யஜுர்வேதம்) அன்னத்தின் (உணவு) மகத்துவத்தையும்,  பிரம்ம வடிவம் என போற்றுவதையும் விளக்குகிறது.  இது உணவை  தெய்வமாக...